“இது ஒன்றும் பா.ஜ.க-வுக்கு விழுந்த அடியில்லை”- அஜித் அறிக்கைக்கு தமிழிசை பதில்

நடிகர் அஜித், தனக்கு அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு ஆர்வமும் இல்லை என நேற்றுத் தனது அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தினார்.

Web Desk | news18
Updated: January 22, 2019, 12:06 PM IST
“இது ஒன்றும் பா.ஜ.க-வுக்கு விழுந்த அடியில்லை”- அஜித் அறிக்கைக்கு தமிழிசை பதில்
தமிழிசை சவுந்தரராஜன்
Web Desk | news18
Updated: January 22, 2019, 12:06 PM IST
”மற்ற நடிகர்களைப் போல் வருவேன்... வரமாட்டேன் எனக் குழப்பாமல் நடிகர் அஜித் தனது அரசியல் குறித்துத் தெளிவுபடுத்தி உள்ளார். இது ஒன்றும் பா.ஜ.க-வுக்கு விழுந்த அடியில்லை” எனத் தெரிவித்துள்ளார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜன்.

சில தினங்களுக்கு முன்னர் திருப்பூரில் நடிகர் அஜித் ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜக-வில் இணைந்தனர்.

இதையடுத்து விரைவில் நடிகர் அஜித்தும் பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பார் என்ற தொணியில் பேச்சுகள் பாஜக தரப்பில் இருந்து எழுந்தது.

இதையடுத்து நடிகர் அஜித் நேற்று தனது ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் அஜித், தனக்கு அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு ஆர்வமும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், அந்தக் கடிதத்தில் “மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம், ஒழுங்கை மதித்து நடந்து கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவைதான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை, “நாங்கள் அஜித்தை பாஜக-வுக்கு வரவேண்டும் என்றெல்லாம் அழைக்கவில்லையே. மற்ற நடிகர்களைப் போல் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என இழுக்காமல் தெளிவுபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். பலர் சொல்வதுபோல் நடிகர் அஜித்தின் அறிக்கை ஒன்றும் பாஜக-வுக்கு விழுந்த அடியில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும் பார்க்க: விஜய் - இயக்குனர்கள் உறவு
First published: January 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...