தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளர்.
தெலங்கானா ஆளுநர் நரசிம்மன் மாற்றப்பட்டு தமிழக பாஜக தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநில ஆளுநர் சதாசிவம் மாற்றப்பட்டு அப்பொறுப்புக்கு ஆரிப் முகம்மது கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சல் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பகத் சிங் கோஷ்யாரி மஹாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹிமாச்சலுக்கு பண்டாரு தத்ரேயா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடக்கம் முதலே பாஜகவில் இருக்கும் தமிழிசை பலமுறை அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். தமிழக பாஜக தலைமை மாற்றப்படும் என்று பல மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், தமிழிசை ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று நியூஸ் 18-ன் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் தமிழிசை மாற்றப்படுவார் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள ஆளுநர் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், வித்யாசாகர் ராவ் ஆகியோர்களது பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.