தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை மற்றும் கனிமொழி ஆகியோரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக அடுத்தமாதம் 18-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்து வருகிறது. தூத்துக்குடி தொகுதி தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்துவரும் வேட்புமனு பரிசீலனையில், அந்தத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திமுக வேட்பாளர்கள் கனிமொழி ஆகிய இருவரின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.
கனிமொழி பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் அவரது வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளது, கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்குகள் குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது.
Also See...
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.