பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் குறைவான எண்ணிக்கையில் தமிழகம்..! முதலிடம்..?

பாலியல் வன்கொடுமை சம்பவங்களோடு மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் குறைவான எண்ணிக்கையில் தமிழகம்..! முதலிடம்..?
பாலியல் வன்கொடுமை
  • News18
  • Last Updated: December 13, 2019, 7:02 AM IST
  • Share this:
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், குறைவான எண்ணிக்கையுடன் தமிழகம் உள்ளது.

தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. 2015 முதல் 2017ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அந்த ஆய்வில், 4 ஆயிரத்து 976 பாலியல் வன்கொடுமை சம்பவங்களோடு மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி (1,870), சத்தீஸ்கர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

அதேசமயம், பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சர அடிப்படையில், தலைநகர் டெல்லி 19.1 சதவீத குற்றங்களோடு முதலிடத்தில் உள்ளது. 12.1 சதவீத குற்றங்களோடு மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும், சத்தீஸ்கர், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.


இதேபோல், பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில், 6 சம்பவங்களோடு புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. 24 சம்பவங்களோடு நாகாலாந்து இரண்டாம் இடத்திலும், 2015 முதல் 2017ம் ஆண்டு வரை 342 பாலியல் வன்கொடுமை சம்பவங்களோடு தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. குஜராத், பீகார் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சர அடிப்படையில், தமிழகம் ஒரு சதவீத பாலியல் வன்கொடுமை குற்றங்களோடு நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத், நாகாலாந்து, பீகார் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களிலும், புதுச்சேரி ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
 
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்