ரஜினி அரசியலுக்கு வருவரா, இல்லையா என்பது குறித்து தெரியாது - தமிழருவி மணியன்

ரஜினி அரசியலுக்கு வருவரா, இல்லையா என்பது குறித்து தெரியாது - தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் - தமிழருவிமணியன்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து தமிழருவி மணியன் திடீர் ஆலோசனை நடத்தினார்

 • Share this:
  ரஜினி அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

  சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்து தமிழருவி மணியன் திடீர் ஆலோசனை நடத்தினார். 2 நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழருவி மணியனின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

  சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழருவி மணியன், ரஜினியின் உடல்நிலை குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதுபற்றி கருத்து தெரிவிக்க முடியாது என கூறினார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: