மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசை கண்டித்து
சென்னை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசை மத்திய அரசு தடுக்காமல் மறைமுகமாக உதவி செய்வதாக குற்றம் சாட்டினார்.
மேலும் தமிழகத்தில் அஞ்சல் அலுவலகங்களில் 946 அஞ்சல் பணியிடங்களில் 46 நபர்களை தவிர 900 நபர்கள் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல் என்று தெரிவித்தார்.
Must Read : நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் உறுதி
அத்துடன், இந்த விவகாரங்களில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக வேல்முருகன் குற்றம் சாட்டினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.