தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் மூன்றை ஆண்டு கால சிறை; 15 பிரம்பு அடி தண்டனை

ஜாமீனில் வெளியே வந்தநிலையில் ஒரு நாள் மது குடித்துவிட்டு பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள மார்க்கெட்டில் இருந்த குப்பைத்தொட்டி, பெஞ்சுகளை சேதப்படுத்தினார்.

news18
Updated: August 8, 2019, 8:32 AM IST
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு சிங்கப்பூரில் மூன்றை ஆண்டு கால சிறை; 15 பிரம்பு அடி தண்டனை
கோப்புப் படம்
news18
Updated: August 8, 2019, 8:32 AM IST
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மூன்றரை ஆண்டு கால சிறை தண்டனையும் 15 பிரம்படியும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். அவருக்கு வயது 25. சிங்கப்பூரில் அவருக்கு மாத சம்பளமாக 600 சிங்கப்பூர் டாலர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர்களிடம் இருந்த பணத்தை பறித்து உள்ளதாக முருகேசன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் முருகேசனை கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது எச்சில் துப்பியும், 2 காவலர்களின் கைகளைக் கடித்தும், தாக்கியும் தகராறு செய்தார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தநிலையில் ஒரு நாள் மது குடித்துவிட்டு பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள மார்க்கெட்டில் இருந்த குப்பைத்தொட்டி, பெஞ்சுகளை சேதப்படுத்தினார். இதுபோன்று 6 குற்ற வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதுதொடர்பான விசாரணை சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது முருகேசன், “இனி தவறுகளில் ஈடுபடமாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு தண்டனையை குறைத்து கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், தண்டனை சற்று குறைக்கப்பட்டு, முருகேசனுக்கு 3½ ஆண்டு சிறை தண்டனையும், 15 பிரம்படியும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Also see:

Loading...

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...