தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது அரசியல்வாதியும் பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான தொழிலாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2021 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது திரு நாஞ்சில் சம்பத் அவர்களுக்கும், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும் பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமன் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருது சூரியா சேவியர் அவர்களுக்கும் சிங்காரவேலன் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களுக்கும் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது முனைவர் சஞ்சீவிராயர் அவர்களுக்கும் சி பா ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை இதழக்கும் வழங்கப்படுகிறது.
தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு.அரசேந்திரன் அவர்களுக்கும், உமறுப்புலவர் விருது திரு.நா. மம்மது அவர்களுக்கும் , கி.ஆ.பெ.விர்து முனைவர் ம.ராசேந்திரன் அவர்களுக்கும், கம்பர் விருது திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் ஜி.யு.போப் விருது திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களுக்கும் மறைமலையடிகள் விருது திரு.சுகி.சிவம் அவர்களுக்கும், இளங்கோவடிகள் விருது திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கும் அயோத்திதாசப் பண்டிதர் விருது திரு.ஞான அலாய்சியஸ் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: குடியரசுத் தின ஊர்தியில் வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
மேலும், இவ்வாண்டு முதல் விருது பெரும் ஒவ்வொருவருக்கும் விருது தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்க பெறுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.