• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • Tamil Top News Today | ஜெயலலிதா போயஸ் இல்ல வழக்கு- இன்று தீர்ப்பு

Tamil Top News Today | ஜெயலலிதா போயஸ் இல்ல வழக்கு- இன்று தீர்ப்பு

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

Headlines Today : உள்ளூர் முதல் உலகநடப்புகள் வரை அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

 • Share this:
  போயஸ் இல்ல வழக்கு : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கிய உத்தரவை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பளிக்க உள்ளது. தீபா மற்றும் தீபக்கின் மனுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

  வங்கக்கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி : புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.

  மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை : வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் இந்த ஆலோசனையில் முதலமைச்சர் பங்கேற்கிறார். இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறைச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

  முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறது மத்திய குழு : தமிழகத்தில் மழை, வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக நேற்று ஆய்வு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

  சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாலர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

  சேமிப்பு கச்சா எண்ணெயை விடுவிக்கிறது மத்திய அரசு : நாட்டில் பெட்ரோலியத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில், சேமிப்பில் உள்ள 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை விடுவிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மங்களூர் சுத்திகரிப்பு நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகியவற்றுக்கு விற்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  பிரதமர் தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை : மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கிறது. இந்நிலையில், தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடைவிதிப்பதுடன், ரிசர்வ் வங்கியே டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் மசோதா உள்ளிட்ட 26 மசோதாக்கள், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

  வெளிநாட்டினருக்கு கொரோனா பரிசோதனை : வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 99 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vijay R
  First published: