கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் என்ற சிற்றூரில் 1712 ம் ஆண்டு பிறந்தவர் நீலகண்டபிள்ளை. இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றி வந்தார். அப்போது குளச்சல் போரில் டச்சு படை தளபதி டிலனாய் கைது செய்யப்பட்டு பின்னர் திருவிதாங்கூர் அரசின் தளபதியாக போர் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இவர் தக்கலை அருகே புலியூர்குறிச்சி யில் உள்ள அரண்மனையில் வீரர்களுக்கு போர் பயிற்சி, ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த போது, அங்கே பணியாற்றிய நீலகண்டபிள்ளைக்கும் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. இயேசு கிறிஸ்துவினுடைய பாடுகள் அவரது வரலாறுகளை டிலனாயிடம் இருந்து கேட்டு தெரிந்த நீலகண்டபிள்ளை மனம் கவரப்பட்டார்.
இதை தொடர்ந்து, அன்றைய பாண்டிய நாட்டின் இடமான நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் இருந்த தேவாலயத்தில் திருமுழுக்குப் பெற்று தேவசகாயம் பிள்ளை என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். மதம் மாறியதால் அவர் பணியாற்றி வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு அவரின் பணிகள் பறிக்கப்பட்டது. சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் .
பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அவர், அதை பொருட்படுத்தாமல் இறைப் பணியை முன்னிலை படுத்தியதால் அவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடி மலைதட்டு பகுதியில் சிறைவைக்கப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் மூலம் மறைசாட்சியானர். அவருடைய உடலை மூன்று நாட்களுக்குப் பின்னர் எடுத்து வந்து நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
இவருக்கு ரோம் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ், இன்று புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், வாட்டிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
இந்நிலையில், வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்ததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே! https://t.co/4nAVp6m7Cb pic.twitter.com/eu9g1WTVgI
— M.K.Stalin (@mkstalin) May 15, 2022
அத்துடன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே என அவர் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, அண்மையில் தமிழணங்கு' என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தமிழ்த்தாயின் ஓவியம் பல்வேறான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த அந்த ஓவியத்தில் தமிழ்த்தாய் கறுப்பு நிறத்தில் தலை விரிகோலமாக உக்கிரத்தோடு இருப்பது போன்றும், காலில் சிலம்பு அணிந்து கையில் 'ழ' என்கிற எழுத்தைத் தாங்கிய வேலோடு இருப்பதாகவும் வரையப்பட்டிருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.