Home /News /tamil-nadu /

தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ரிசர்வ் பேங்க் விளக்கம்

தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சை தொடர்பாக ரிசர்வ் பேங்க் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற குடியரசுத் தின நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் 73வது குடியரசுத் தினவிழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசுத்தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் ஒரு சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை செலுத்தவில்லை என்று சிலர் அவர்களை கேட்டுள்ளனர்.

    அதற்கு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கள் எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதாக அவர்கள் பதிலளித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பு உண்டானது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்பது உறுதி செய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் தமிழ்தாய் வாழ்த்து எழுந்து நிற்காத சர்ச்சை தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. அதில், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. எனினும் பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன.

    Also Read : தஞ்சை மாணவி தற்கொலை : நேரில் சென்று விசாரணை நடத்த 4 பேர் குழுவை அமைத்தது தேசிய பாஜக

    தமிழ் தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்கு முறைப்படுத்தும் அமைப்பு என்கின்ற முறையில் நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்.



    இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள் மண்டல இயக்குனர் எஸ்.எம்.எஸ்.சுவாமி தலைமையில்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்து இது தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்தனர் என்றுள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chennai, RBI

    அடுத்த செய்தி