• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. ராமதாஸ் கண்டனம்!

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு.. ராமதாஸ் கண்டனம்!

ராமதாஸ்

ராமதாஸ்

ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை ஐ ஐ டி யின் 58வது பட்டமளிப்பு விழா இணையம் வாயிலாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம்1,962 மாணவர்களுக்கு இணையம் வழியாக பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் அதிகபட்சமாக 392 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர்.

    வழக்கமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறும். ஆனால், ஐஐடி-யில் நேற்று வந்தே மாதரத்துடன் துவங்கிய நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் முடிந்துள்ளது. தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து புக்கணிக்கப்பட்டதுடன், மாணவர்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றபின் சமஸ்கிருதத்தில் மந்திரத்தை சொல்லி முடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில், சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது இது முதல்முறை அல்ல என்றும் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.



    இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சென்னை ஐ.ஐ.டியில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. மாறாக சமஸ்கிருதத்தில் இறைவணக்கம் பாடப்பட்டிருக்கிறது. இது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.

    கடந்த 2018-ஆம் ஆண்டு ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. அப்போதும் அதை கடுமையாக கண்டித்தேன். அதைத் தொடர்ந்து ஐ.ஐ.டி நிர்வாகம் வருத்தம் தெரிவித்தது.

    2019-ஆம் ஆண்டு ஐஐடி வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அந்த வழக்கத்தை ஐ.ஐ.டி மாற்றக்கூடாது.

    தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு விழாக்களிலும் #தமிழ்த்தாய்வாழ்த்து கண்டிப்பாக பாடப்படுவதை தமிழக அரசு. ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் இது குறித்து தமிழக அரசு பேசி அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: