தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் வேறுபாடு இல்லை, கருத்தால் ஒன்றுபட்டவை: இல. கணேசன் பேச்சு

தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் வேறுபாடு இல்லை, கருத்தால் ஒன்றுபட்டவை: இல. கணேசன் பேச்சு

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்.

தமிழகத்தில், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றதால் தான், வித்வான் பட்டம் வழங்கும் நடைமுறை, முன்பு இருந்தது.

 • Share this:
  தமிழ் சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் வேற்றுமைகள் பற்றி இன்னமும் கூட ஆய்வுகள் முடிந்தபாடில்லை எனும் நிலையில் தமிழும், சமஸ்கிருதமும், சொல்லாலும் கருத்தாலும் ஒன்றுபட்டவை என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளார்.

  சம்ஸ்கிருத பாரதி' அமைப்பின் சார்பில், 'தமிழகத்தில், 17ம் நுாற்றாண்டில் தமிழும், சமஸ்கிருதமும்' என்ற தலைப்பில், இரண்டு நாள் கருத்தரங்கம் இணைய வழியில் நடந்தது.

  அந்தக் கருத்தரங்கில் இல. கணேசன் பேசியதாவது:

  தமிழகத்தில், தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தேர்ச்சி பெற்றதால் தான், வித்வான் பட்டம் வழங்கும் நடைமுறை, முன்பு இருந்தது.

  இது, தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் தமிழகத்தில் இருந்த சமவாய்ப்பையும், வழக்கையும் காட்டுகிறது. இந்த இரு மொழிகளுக்கும் இடையில், தொனியிலும், கருத்திலும்வேறுபாடு இல்லாமல் இருந்தது.

  அதாவது, தர்மம் என சமஸ்கிருதம் எதைச் சொல்கிறதோ, அதைத் தான், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மதுரையை எரிக்கும் போது, தீயிடம் கூறுகிறாள். அது மட்டுமல்ல... இந்திய மொழிகள் அனைத்துக்கும் வேறுபாடு இல்லை என்பதை, அவை அகரத்தில் இருந்து துவங்குவதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

  நம் முன்னோர், மொழி பாகுபாடு காட்டாமல் இருந்ததைப் போல், வருங்கால தலைமுறையும் இருந்தால், நாடு ஒற்றுமையாக இருக்கும், என்று பேசினார் இல.கணேசன்.

  நிகழ்ச்சியில், சம்ஸ்கிருதபாரதி அமைப்பின் தென்மண்டல தலைவர் ராமச்சந்திரன், பேராசிரியர் கோபபந்த மிஸ்ரா, நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  Published by:Muthukumar
  First published: