தமிழ்மயமாகும் காவல்துறை! அனைத்து போலீசும் தமிழில் கையெழுத்திட உத்தரவு

தமிழ்மயமாகும் காவல்துறை! அனைத்து போலீசும் தமிழில் கையெழுத்திட உத்தரவு
  • News18 Tamil
  • Last Updated: November 25, 2019, 10:10 PM IST
  • Share this:
அனைத்து காவலர்களும் வருகை பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் நடந்த ஆய்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, காவலர்கள் தங்கள் இருக்கையில் பராமரிக்கும் தன் பதிவேடு, முன் கொணர்வு பதிவேடு, உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து கடிதத் தொடர்புகளும், குறிப்பாணைகளும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காவல் வாகனங்களின் மீது தமிழில் காவல் என எழுதப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில், அனைத்து அலுவலக முத்திரைகளும், பெயர் பலகைகளும் தமிழில் மாற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Watch Also:
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்