ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பால் பொங்கட்டும்... வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்... இனிய பொங்கல் வாழ்த்துகள்

பால் பொங்கட்டும்... வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்... இனிய பொங்கல் வாழ்த்துகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழர்கள் பண்டிகையான பொங்கல் இன்று நாடு கடந்து வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு மட்டுமல்ல நாடு கடந்து வாழும் தமிழ்ரகளால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிந்துவிடுதல்ல. தை 1-ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், தை 3-ம் தேதி காணும் என்றும் என்று அதற்கு தை 4-ம் தேதி திருவள்ளுவர் தினம் என்றும் ஆண்டுதோறும் தமிழர்களால் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தமிழர்கள் ஆண்டு முழுவதும் எத்தனை எத்தனை பண்டிகைக்களைக் கொண்டாடினாலும் தமிழர்களின் பண்டிகை என்பது பொங்கல்தான். அறுவடை நாளை சிறப்பிக்கும் ஒன்றாக பாரம்பரியமாக பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்தில் இருந்துவருகிறது. நாடு முழுவதும் பரவி வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.

  பொங்கல் விழா கொண்டாட்டம் என்பது, நகரங்களை விட கிராமங்களில் சிறப்பாக களைகட்டும். மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் சிறப்புக் கோலம் போட்டு மகிழ்வார்கள். பொங்கல் அன்று வாசல்களில் மிகச் சிறப்பான கோலம் போட்டு ரசித்துமிகழ்வார்கள். அந்தக் கோலத்தில் வைத்துதான் பொங்கல் விடப்படும்.

  தமிழ் அறிஞர்கள் பலரும், தை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகவும் கடைபிடித்துவருகின்றனர். பொங்கல் அன்று புதுப் பானைகளில் பச்சரிசி போட்டு அடுப்புக் கல் வைத்து பனை ஓலையைப் பயன்படுத்தி பொங்கல் விடுவது அதன் சிறப்பாகும். மறுநாள் விவசாய விளை பொருள்களை வைத்து சூரியனை கடவுளாக நினைத்து வழிபடுவார்கள். இளைஞர்களைப் பொறுத்தவரை அவர்கள் விருப்பமான நடிகர்களின் படங்கள் வெளியாவதைக் கொண்டாடித் தீர்ப்பதில் பொங்கல் முழுமை பெறும்.

  கால மாற்றத்தில் தமிழ்ச் சமூகம் எத்தனை எத்தனை மாற்றங்களைக் கண்டிருந்தாலும், பொங்கல் பண்டிகை அதற்கேற்றாற் போல தன்னை தகவமைத்து இன்னும் நிலைத்துவருகிறது. இந்த நன்நாளில் எல்லோரும் அன்பை விதைப்போம்... பால் பொங்கட்டும்... வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும்...

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Karthick S
  First published:

  Tags: Pongal 2021