திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சிப்பதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர். எஸ். எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 5 ரயில்நிலையங்கள் உட்பட தெற்கு ரயில்வேயில் உள்ள 9 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நியாயவிலைக் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகளால் கற்பிக்கப்படும் 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘வர்ணாஸ்ரமம்’ குறித்து சித்தரித்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து, வரலாற்றுப் பாட புத்தகங்களை சிபிஎஸ்இ வெளியிடுவதில்லை, ஆகவே இந்த விவகாரத்திற்கும் சிபிஎஸ்இ-க்கும் தொடர்பில்லை என அந்த வாரியம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிகர காவல்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்
உலகக்கோப்பை தொடரிலிருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகல் என தகவல் வெளியாகி உள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breaking News, Headlines, News18 Tamil Nadu