Home /News /tamil-nadu /

Tamil News Today : உக்ரைன் போர் முதல் தமிழக மாணவர்கள் மீட்பு வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் (பிப்ரவரி 28, 2022)

Tamil News Today : உக்ரைன் போர் முதல் தமிழக மாணவர்கள் மீட்பு வரை.. இன்றைய முக்கியச் செய்திகள் (பிப்ரவரி 28, 2022)

உக்ரைன் மீது தாக்குதல்

உக்ரைன் மீது தாக்குதல்

Tamil News Today : உக்ரைனில் தமிழக மாணவர்கள் அதிகமாக உள்ள கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியான சூழலில், அதனை உக்ரைன் ராணுவம் மீட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான உங்களில் ஒருவன் என்ற நூலை, சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார்.

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

  மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழகத்திற்கு உரிமை இல்லை என கூறிய கர்நாடக எதிர் கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 439 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியம் பேரூராட்சியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏழு பேர் திமுக-வில் இணைந்தனர்.

  நெல்லை மாவட்டத்தில் புத்தக காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 18-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது.

  தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டில் வரும் 3-ம் தேதி மிக கன மழை பெய்யுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில், மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஓயாது உழைத்துக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  உலகின் தொன்மையான மொழி, தமிழ் என்றும், மக்கள் தங்கள் மொழியை பெருமையுடன் பேசவேண்டும் என்றும், பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

  60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

  உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழக மாணவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

  உக்ரைனிலிருந்து மாணவர்களை வெளியுறவுத் துறை மீட்டுவரும் நிலையில், தாங்களே மீட்டுவந்ததாக தமிழக அரசு கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

  இந்தியா எந்த நாடுகளையும் தாக்கியதில்லை என்றும், உலக நன்மைக்காக அனைவரும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

  உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுச்சபையின் அவசர சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  போர் நிறுத்தம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க பெலாரஸ் எல்லையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  உக்ரைனில் இருந்து அதிகளவு மக்கள் வெளியேறி வரும் நிலையில் உலகின் பல நாடுகளும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. நீண்ட தூரம் நடந்து வந்த அகதிகளுக்கு உணவளித்து மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்தினர்.

  உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள ஹிஸ்டோமல் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி இருக்கும் ரஷ்ய படைகள், அங்கிருந்த உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை அழித்துள்ளன.

  ரஷ்யாவின் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும்படி அந்நாட்டு ராணுவத்திற்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

  உக்ரைனில் தமிழக மாணவர்கள் அதிகமாக உள்ள கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டதாக தகவல் வெளியான சூழலில், அதனை உக்ரைன் ராணுவம் மீட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  பிரான்ஸில் கேளிக்கை திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு ஏற்ப ராஜா, ராணியை விலங்குகளின் உடல்களில், மனித முகங்களுடன் சித்தரித்து மேளதாளங்களுடன் அணிவகுப்பு நடைபெற்றது.

  தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலுக்கான தலைவர் பதவியில், புதுவசந்தம் அணி சார்பாக போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றுள்ளார்.

  புதுச்சேரி அஜித் ரசிகர்கள் சார்பில், 150 பேருக்கு வலிமை திரைப்படம் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது .

  Also Read : பொருளாதாரத் தடை விதித்த ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா நடவடிக்கை

  43வது தேசிய சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் முதல் போட்டியில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முறையே கர்நாடகத்தையும், தெலங்கானாவையும் எளிதில் வீழ்த்தின.

  மெக்சிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெய்னின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

  Must Read : Exclusive: மெட்ரோ ரயிலின் 6 ஆண்டுகால இழப்பை ஏற்றுள்ள தமிழக அரசு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்

  இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை ஒயிட் வாஷ் செய்தது.

  சிலம்பத்தை ஒலிம்பிக்-கில் சேர்க்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் ஆயிரம் மாணவர்கள், 3 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றினர்.

  Read More : தமிழகத்தில் பாஜகவின் நிலை உயர காரணம்... ரகசியம் உடைத்த ஜான் பாண்டியன்

  கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

  நாட்டிலேயே முதன்முறையாக லே-வில் பனிக்கட்டிகளுக்கு இடையே மலையேறும் போட்டி நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பனிமலையேறும் வீரர்கள் பங்கேற்றனர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, MK Stalin, Tamil News, Top News

  அடுத்த செய்தி