தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தல்- வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கம்

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

 • Share this:
  தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், வெற்றி பெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்திவாசிப்பாளர்களாக பணிபுரிந்த, பணிபுரியும் செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டு வருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். எந்தவித அரசியல், நிறுவன பாகுபாடுகளும் இன்றி அனைத்து செய்தி வாசிப்பாளர்களையும் ஒன்றுதிரட்டி அவர்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக்கொண்டு சேவையாற்றிக்கொண்டிருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திமுடிக்க செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  அதன்அடிப்படையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்தல் பணிகள் நேர்மையான முறையில் செய்யப்பட்டன. தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் கடந்த செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

  ஜனநாயக முறைப்படி நடந்த அந்தத்தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப்பொதுச்செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பதவியேற்கும் நிகழ்வு இன்று ( 12.09.2021) சென்னை அடையாறு போர்ட்கிளப்பில் உள்ள அண்ணாமலை பல்கலைகழக அலும்னி கிளப்பின், வோல்டெக் உமாபதி ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட நீதிபதி. டாக்டர்.ஐ.ஜெயந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தேர்தல் அலுவலர் செந்தமிழ் அரசு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். புதியநிர்வாகிகள் உறுதிமொழி கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

  எந்தவித குளறுபடிகளுக்கும் இடம்கொடுக்காமல், நேர்மையான மற்றும் ஜனநாயக முறைப்படி தேர்தலை முன்னின்று நடத்திய தேர்தல் அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, கௌரவிக்கப்பட்டனர்.

  தமிழ்நாட்டில் செய்தியாளர்களுக்கு என்று பல அமைப்புகளும் சங்கங்களும் இருக்கின்றன. ஆனால் அதில் இருக்கும் பெரும்பாலான சங்கங்களில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக தேர்தல் நடத்தப்படாத சூழலில், முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி, சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து மற்ற சங்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது எங்கள் தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

  சங்க உறுப்பினர்களின் நலனுக்காக ஏராளமான திட்டங்களை முன்னெடுத்துவந்த தமிழ்செய்தி வாசிப்பாளர்கள் சங்கம், தொடர்ந்து தமிழக ஊடகங்களில் பணியாற்றும் செய்தி வாசிப்பாளர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதோடு, சங்க உறுப்பினர்களின் நலனுக்காக என்றைக்கும் பாடுபடும் என்பதை பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுக்கொண்டவர்களின் விபரங்கள்

  தலைவர் -பிரபுதாஸன்
  பொதுச்செயலாளர் -சண்முகவேல்
  பொருளாளர் -தமிழரசி சிவக்குமார்
  துணைதலைவர்கள் - சி.ஏ.மோகன்ராஜ், ஜெயஸ்ரீ சுந்தர்
  துணைப் பொதுச்செயலாளர்கள் -கிரிஜாஸ்ரீ, சிவக்குமார், கிறிஸ்டோபர்
  செயற்குழு உறுப்பினர்கள்
  பராசக்தி செந்தில்குமரன்
  அருணா ரமேஷ்
  ஐஷ்வர்யா கிரிஷ்
  சங்கீதா சுரேஷ்
  சமீர் அக்தர்
  மீனாட்சி சுந்தரம்
  பாலகணேஷ்
  மனோஜ்குமார் கோபாலன்
  பாலவேல் சக்ரவர்த்தி
  கௌரி
  ஜெயச்சந்திரா
  ஈவ்லின் பிரசன்னா
  மோஸஸ் ரத்தினராஜ்
  அருண் பிரசாத்
  அமிர்தவல்லி
  Published by:Karthick S
  First published: