Latest Tamil News :தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு

Today News Tamil - Live Updates:கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | July 02, 2021, 20:26 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A YEAR AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  22:41 (IST)

  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

  20:31 (IST)

  உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி; தேநீர் கடைகளிலும் 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

  20:20 (IST)


   டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்

  20:15 (IST)

  தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலம் ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவு

  19:46 (IST)

  ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 4 வது நபராக கைது செய்யப்பட்டுள்ள சவுகத் அலி இன்று இரவு 9 மணிக்கு தனிப்படை போலீசாரால் அரியானாவிலிருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்.

  18:43 (IST)

  18:0 (IST)

  மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வளாகத்தில் மதுரை மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை ஏற்று தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது மே இரண்டாம் தேதி தமிழக மக்கள் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என தீர்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம்.

  ஆனால் நடந்தது என்ன? தீர்ப்பு மாறிவிட்டது. மக்கள் அளித்த தீர்ப்பு மக்களின் எண்ண ஓட்டத்திற்கான தீர்ப்பாக இல்லையே என நாம் விவாதிக்கின்ற போதுதான் கட்சிக்குள் உள்குத்து, வெளிக்குத்து இருந்ததாலேயே நாம் ஆட்சியை பறிகொடுக்க நேர்ந்தது.

  நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு இருந்தால் அதிமுக என்ற இயக்கத்தை யாரும் வென்றிருக்க முடியாது. அதிமுகவை வெல்லுகிற சக்தியால் நாம் தோற்கடிக்கப்படவில்லை. வெல்லுகிற சக்தி எங்கேயும் இல்லை. எம்ஜிஆர் காலத்திலும் ஜெயலலிதா காலத்திலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார்கள்.

  ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கத்தில் நாம் பெற்றிருக்கின்ற வாக்குகள் 1 கோடியே 46 லட்சம் வாங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது .ஒரு கோடியே 46 லட்சம் வாக்கு பெற்ற நமக்கு பொங்கலுக்கு கரும்பு 2,500 ரூபாய் பணம், அரிசி, சர்க்கரை வாங்கிச் சென்ற குடும்பத்தினர் குடும்பத்திற்கு ஒரு ஓட்டு போட்டு இருந்தாலே நாம் ஆட்சியில் நிலைத்திருக்கலாம்.

  நமக்கு தோல்வி கிடைத்த இடங்களில் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது 2 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று இருந்தால் முதல்வர் எடப்பாடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைத்து இருப்போம் என பேசினார்.

  17:49 (IST)

  16:42 (IST)

  முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இரு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி...

  காவலில் வைத்து விசாரிக்க அனுமதி மறுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்...

  ஜூலை 3, 4 ம் தேதிகளில் மதுரை அழைத்து சென்று மணிகண்டனின் மொபைலை கண்டுபிடிக்க விசாரணை நடத்த அனுமதி...

  13:5 (IST)