Home /News /tamil-nadu /

Headlines Today| சுட்டெரிக்கும் வெயில் முதல் ஐபிஎல் CSK வெற்றி வரை - இன்றைய தலைப்புச் செய்திகள் ( மே 02 - 2022 )

Headlines Today| சுட்டெரிக்கும் வெயில் முதல் ஐபிஎல் CSK வெற்றி வரை - இன்றைய தலைப்புச் செய்திகள் ( மே 02 - 2022 )

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

  தமிழ்நாட்டின் ஒருசில மாவட்டங்களில் நேற்று வெயில் சுட்டெரித்தது. கடலூர் மாவட்டத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார்.

  சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரை சாலைக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  நகைச்சுவை நடிகர் விவேக்கை பெருமைப்படுத்தும் விதமாக அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலைக்கு, சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  கடலூர் அருகே அரசுப் பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

  திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நகைக்கடைக்குள் புகுந்து 11 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே அறுவடைப் பணிகள் முடிவடைவதற்குள், திடீரென மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சென்னையில் ஒரு நாள் திரைப்பட பாணியில், வேலூரில் இருந்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் மின்னல் வேகத்தில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. 135 கிலோ மீட்டர் தொலைவை 75 நிமிடத்தில் கடக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

  நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்து முதியவர் மீது சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து சுற்றித்திரியும் ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒகாலிபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். பெங்களூரு நகரில் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

  நாட்டின் எந்த பகுதியையும் இழக்க மாட்டோம் என சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே சூளுரைத்துள்ளார்.

  இலங்கை மக்களுக்கு மத்திய அரசு மூலம் தமிழ்நாடு அரசு நிவாரண பொருட்களை அனுப்பலாம் என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

  ரஷ்யாவின் அர்த்தமற்ற போரால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai Super Kings, CSK, Dhoni, DMK, Headlines, International, IPL, MK Stalin, National, Politics, Sports, Tamil News, Tamilnadu

  அடுத்த செய்தி