தமிழ்ப் புத்தாண்டு: பிரதமர், முதல்வர், கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

news18
Updated: April 14, 2019, 12:23 PM IST
தமிழ்ப் புத்தாண்டு: பிரதமர், முதல்வர், கமல்ஹாசன் வாழ்த்து
முதல்வர்|பழனிசாமி| பிரதமர் மோடி| கமல்ஹாசன்
news18
Updated: April 14, 2019, 12:23 PM IST
தமிழ்ப் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த புத்தாண்டு தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “தமிழ் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். வரும் ஆண்டில் உங்கள் ஆசைகள் நிறைவேறட்டும், அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்” என்று கூறியுள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழனென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடினார். அவரது பாடல் வரிகளுக்கு ஏற்ப ஈடில்லாத பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட தமிழர்கள், சித்திரைத் திங்கள் முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக பல ஆண்டுகளாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “இனிய தமிழ்ப் புத்தாண்டு புரட்சிப் புத்தாண்டாக மலரவும், தமிழும் தமிழரும் சிறக்கவும் செழிக்கவும் வாழ்த்தும் உங்கள் நான்” என்று கூறியுள்ளார்.வெல்லும் சொல்: தா. பாண்டியனுடன் சிறப்பு நேர்காணல்


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...