Home /News /tamil-nadu /

மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு மாறுகிறதா? பை ஏற்படுத்தும் சர்ச்சை

மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு மாறுகிறதா? பை ஏற்படுத்தும் சர்ச்சை

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு

சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஒரு தரப்பினரும் தை ஒன்றாம் தேதியே தமிழ் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகிறனர். இந்நிலையில், தமிழக அரசின் பொங்கல் தொகுப்புக்கான பை என வெளியாகியுள்ள புகைப்படம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பையில் இடம்பெற்றுள்ள வாசகம் தமிழ் புத்தாண்டு தொடர்பாக புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஒரு தரப்பினரும் தை ஒன்றாம் தேதியே தமிழ் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகிறனர். தமிழருக்கு தனியாக தொடர் ஆண்டு முறை இல்லையாதலால், அவற்றை உருவாக்கவும், இலக்கிய வரலாற்று சான்றுகளை ஆய்வு செய்து, ஒருமித்த ஒரு முறையை கையாள்வது என தமிழறிஞர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி, 1935 -இல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள், சென்னையில்  ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி, திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இந்த நிலையில், கருணாநிதி தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசு 1972-ம் ஆண்டு முதல் அரசுப் பயன்பாட்டிலும், ஆவணங்களிலும், திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக 2006-2011-ம் கால கட்ட கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் 2008-ம் ஆண்டு திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். எனவே, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று  அறிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து


    பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, ‘தமிழ்ப் புத்தாண்டு, தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

    தற்போது 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் புத்தாண்டு தொடர்பாக சர்ச்சை எழத் தொடங்கியுள்ளது. இதனிடையே, 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இம்மா த தொடக்கத்தில் அறிவித்தது. அதில், அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    பொங்கல் பை


    இதனால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்னும் கொள்கையில் இருந்து திமுக பின் வாங்கியதா என சிலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள  20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பிற்கான துணிப் பை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அருகிறது. அதில், ‘இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்’ என அச்சிடப்பட்டிருக்கிறது. எனவே, தை ஒன்றாம்தேதியே தமிழ் புத்தாண்டு என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் படிங்க: அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலால் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெற்றி என அறிவிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் மனு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Pongal Gift, Tamil New Year

    அடுத்த செய்தி