• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்ப் புத்தாண்டு 2021 : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டு 2021 : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா,  தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா,  தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    சார்வரி ஆண்டு நிறைவடைந்து இன்று 'பிலவ' தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. அதேபோல, கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு மொழி பேசும் மக்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.

    இந்தியா மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     



     

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள்” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: