தமிழ்ப் புத்தாண்டு 2021 | சார்வரி ஆண்டு நிறைவடைந்து இன்று பிறந்தது 'பிலவ' தமிழ்ப் புத்தாண்டு... ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து...

முதல்வர் பழனிசாமி

சித்திரைத் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு தமிழகம் மற்றும் புதுவையில் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

 • Share this:
  சார்வரி ஆண்டு நிறைவடைந்து பிலவ தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடங்கியது. இதையொட்டி உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்புத்தாண்டை இன்று வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். சித்திரை திருநாளை முன்னிட்டு ஒருசில கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், வீடுகளில் தோரணம் கட்டி, தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை அணிந்தும், வீடுகளில் பல வகை உணவு சமைத்து கடவுளுக்கு படைத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

  கொரோனா பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி பல்வேறு கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து ஒரு சில கோயில்களில் மட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.

  தமிழ்ப் புத்தாண்டையொட்டி தலைவர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித் விடுத்துள்ள செய்தியில், ஒவ்வொரு குடும்பத்தினரின் வாழ்விலும் அமைதியும், வளமும், வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தழைத்தோங்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் படிக்க... மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம்

  முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என்று கூறியுள்ளார். இதேபோல பல்வேறு தலைவர்களும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: