திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நல்லாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல்நாள் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் நல்லாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சுவாமி முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆற்காடு க.வெ.சீதாராமய்யர் எழுதிய பிலவ வருச பஞ்சாங்க பலன்களை முத்துக்கண்ணன் சிவாச்சாரியார் வாசித்தார்.
ஆதாயத்தைவிட விரயம் அதிகமாக இருப்பதால் மத்திய, மாநில அரசுகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும். சென்னை, பாண்டி, நாகை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வித்திட்டம் அமல்படுத்தப்படும். அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். முக்கிய பதவி வகிப்பவர்களுக்கு உடல் நலிவு, மனச்சோர்வு ஏற்படும். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் புதுவிதமான நோய் தோன்றி கட்டுப்படுத்தப்படும். நிதிப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு என வாசிக்கப்பட்டது.
மேலும் மக்களுக்கு பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பண பரிவர்த்தனை அரசுகளின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இருக்கும். பல்வேறு நாடுகளின் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்படும் இதனால் பெருட்சேதம், உயிர்ச்சேதமும் ஏற்படும்.
அதிக மழையின் காரணமாக வைகை, காவிரி, தாமிரபரணி, கங்கை, யமுனை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, பிரம்மபுத்திரா, பாலாறு ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆணைகள் நிரம்பி வழியும் என உள்ளிட்ட பல்வேறு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிலவ ஆண்டின் பலன்களை வாசித்தார்.
மேலும் படிக்க... கோவையில் கொரோனாவால் முடங்கிய சுற்றுலா வாடகை கார் தொழில்..
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் குறைந்த அளவிலான பக்தர்கள் முன்னிலையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு நடைபெற்றது.
செய்தியாளர்: ராமன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manaparai, Tamil New Year 2021, Trichy