சார்வரி ஆண்டு நிறைவடைந்து பிலவ தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடங்கியது. இதையொட்டி உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்புத்தாண்டை இன்று வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.
சித்திரை திருநாளை முன்னிட்டு ஒருசில கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், வீடுகளில் தோரணம் கட்டி, தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாடை அணிந்தும், வீடுகளில் பல வகை உணவு சமைத்து கடவுளுக்கு படைத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் சித்திரை முதல் நாளான இன்று மாங்கோட்டை, கொத்தமங்கலம், செரியலூர்,
கீரமங்கலம், வடகாடு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த ஆண்டு நல்ல மழை பொழிய வேண்டி நல்லேருபூட்டி விளை நிலத்தையும், உழவு
மாடுகளையும் வழிப்பட்டனர்.
சில விவசாயிகள் தாங்கள் புதிதாக வாங்கும்
மாடுகளை சித்திரை முதல் நாளில் உழவிற்கு பழக்கம் செய்வதும் அப்பகுதி விவசாயிகளின் வழக்கம். அதன்படி, புதிய மாடுகளை வாங்கிய விவசாயிகளும் நேற்று நிலத்தை உழுது விவசாய பணிகளை தொடங்கினர். மேலும், மாடுகள் இல்லாத
விவசாயிகள் டிராக்டர் மூலம் தங்களது உழவுப்பணிகளை மேற்கொண்டு வழிபட்டனர்.
மேலும் படிக்க...ரமலான் நோன்பு-இன்று முதல் கடைப்பிடிப்பு
செய்தியளர்: சே. அரவிந்த், புதுக்கோட்டை
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Pudukottai, Tamil New Year 2021