தமிழ்ப் புத்தாண்டு 2021 : அமித்ஷா தமிழில் வாழ்த்து

அமித் ஷா

சித்திரை முதல் நாளாகிய இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சித்திரை முதல் நாளாகிய இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகெங்கிலும் வாழும் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

  Must Read:   மகாராஷ்டிராவில் இன்று இரவு முதல் 15 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிப்பு..  சார்வரி ஆண்டு நிறைவடைந்து ‘பிலவ' தமிழ்ப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதனை தமிழ் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published: