தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு: 364 பேர் உயிரிழப்பு

மாதிரி படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 364 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி தற்போது மெல்லமாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2.63 லட்சமாக குறைந்தது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கவில்லை. தற்போதுவரை தமிழத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே இருந்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 33,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

  அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால், படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளை தமிழ்நாடு எதிர்கொண்டுவருகிறது.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,463 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 33,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 16,64,350-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 21,362 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 14,03,052 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

  இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 364 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 18,369 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,016 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,071 பேருக்கும், செங்கல்பட்டில் 2,299 பேருக்கும், ஈரோட்டில் 1,568 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: