தன்னார்வலரின் முயற்சியால் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்டோ ஆம்புலன்சுகள் நீலகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவிய காலகட்டத்தில் சிகிச்சை கிடைக்காமல் மக்கள் கூட்டம் அலைமோதியது. படுக்கைகள் முதல் ஆம்புலன்சுகள் வரை கிடைக்காமல் தவியாய் தவித்தனர். மருத்துவமனை வாசல்களிலும், அதனையொட்டிய சாலைகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையாக காத்துக்கிடந்தனர். நகரப் பகுதிகளில், அதுவும் மருத்துவமனைகளை எளிதில் அணுகக்கூடிய இருக்கும் மக்களுக்கே இந்த நிலை என்றால், மலை கிராமங்கள் மற்றும் சாலை வசதிகளே இல்லாத ஊர்களில் வசிப்போரின் பரிதாபத்துக்குரியதாகவே இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையைப் போக்க குன்னூரைச் சேர்ந்த தன்னார்வலர் ராதிகா, தன்னுடைய சொந்த முயற்சியால் நீலகிரி மாவட்டத்துக்கு 6 ஆட்டோ ஆம்புலன்சுகளை இலவசமாக வழங்கியுள்ளார். மலை கிராமங்கள் நிறைந்துள்ள அந்த மாவட்டத்தில் பல குக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மிகவும் குறுகலான பாதைகள் மட்டுமே இருப்பதால் அவசர காலத்தில் அவர்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால், பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பலர் இணைந்து தோளில் தூக்கிவரவேண்டிய நிலையே இன்னும் இருக்கிறது. இத்தகைய பகுதிகளுக்கு ஆம்புலன்சுகள் நேரடியாக செல்ல முடியாவிட்டாலும், சில பகுதிகளுக்கு ஆட்டோகளால் செல்ல முடியும். இந்த வழியைப் பயன்படுத்த நினைத்த ராதிகா, ஜபல்பூரில் செயல்படும் ஆட்டோ ஆம்புலன்சுகளை நீலகிரிக்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளார்.
நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் நிதி திரட்டிய ராதிகா, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 6 ஆட்டோக்களை ஆம்புரிக்ஷ் எனப்படும் ஆட்டோ ஆம்புலன்சுகளாக மாறியுள்ளார். 470 சிசி திறன் கொண்ட பஜாஜ் மாக்சிமா ஆட்டோ ஆம்புலன்சில், நோயாளிக்கான படுக்கை வசதி, ஸ்ட்ரெச்சர், முதலுதவிக்கான கருவிகள் மற்றும் பாதுகாவலர் ஒருவர் உடனிருக்கும் வசதிகள் செய்துத்தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆட்டோவும் தலா 3.5 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. குன்னூர், கோத்தகிரி, கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இந்த ஆம்புலன்சுகள் வழங்கப்படுகின்றன.
Also read... இணையத்தில் சிரமம்... அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு ஏற்பாடு - தமிழக அரசு அதிரடி உத்தரவு
இது குறித்து பேசிய ராதிகா, நீலகிரி மாவடத்தில் மலைக் கிராமங்களில் ஆம்புலன்சுகள் செல்ல முடியாத நிலை இருப்பதற்கு தீர்வு காண வேண்டும் என யோசித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது, மத்திய பிரதேசம் ஜபல்பூரில் ஆட்டோ ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்படுவதை அறிந்ததாகவும், பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களின் திட்டம் குறித்து தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆட்டோ மற்றும் அவற்றின் மறுவடிவமைப்புக்கான தொகை குறித்து கேட்டறிந்ததாக தெரிவித்த ராதிகா, பின்னர் தனது நண்பர்கள், பொதுமக்களிடம் ஆட்டோ ஆம்புலன்சு திட்டம் குறித்து எடுத்துரைத்து, இதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். படிப்படியான முயற்சிகளின் வழியாக தற்போது மக்களுக்கான ஆம்புலன்சு தேவை நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ராதிகா தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ambulance