Home /News /tamil-nadu /

அதிகரிக்கும் வெப்பம்: தமிழகத்தின் மின் தேவை மீண்டும் அதிகரிப்பு

அதிகரிக்கும் வெப்பம்: தமிழகத்தின் மின் தேவை மீண்டும் அதிகரிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழக மின் தேவை  சராசரியாக தினசரி  15 ஆயிரம் மெகா வாட் ஆகவும், அதே சமயம் மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைகாலத்தில் மின் தேவை தினசரி 16000 முதல் 17000 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தற்போது அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக செப்டம்பர் மாதத்தில் மின் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும்,  தமிழகத்தின் தற்போதைய மின் தேவை  16500 மெகா வாட்டை தாண்டியுள்ளது

தமிழக மின் தேவை  சராசரியாக தினசரி  15 ஆயிரம் மெகா வாட் ஆகவும், அதே சமயம் மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடைகாலத்தில் மின் தேவை தினசரி 16000 முதல் 17000 ஆயிரம் மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது.  நடப்பாண்டில் கோடைகாலமான  ஏப்ரல் 29 அன்று மின் தேவை 17563 மெகா வாட்டாக பதிவாகி அதுவே உட்சபட்ச அளவாகவும் இருந்து வருகிறது.

இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்த பரவலான மழை காரணமாக குளிர்ச்சி நிலவியதால் மின் தேவை குறைந்து தினமும் வழக்கமான 15 ஆயிரம் மெகா வாட் என்றளவில் இருந்தது.

இந்நிலையில் செப்டம்பர் மாத துவக்கம் முதல் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரிப்பதால்  அனலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் தமிழகத்தின் மின் தேவை  16577 மெகா வாட்டாகவும் நேற்று  15 500 மெகா வாடாகவும் பதிவாகியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மின்சார தேவை 

தினசரி சராசரி : 15000 மெகாவாட்
கோடை காலத்தில் தினசரி சராசரி : 16500 மெகாவாட்
நடப்பாண்டில் அதிகபட்சம்: 17 563 மெகா வாட் ( ஏப்ரல் 29 )
மீண்டும் உயர்வு : 16 577 மெகா வாட் (21.9.22) ஆக அதிகரித்துள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Electricity

அடுத்த செய்தி