முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவாரூர், நாகையில் திடீர் மழை - விவசாயிகள் கவலை

திருவாரூர், நாகையில் திடீர் மழை - விவசாயிகள் கவலை

மழை

மழை

நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvarur, India

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகாலை முதல் சாரல்மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன. விவசாயிகள் தார்ப்பாய்களை கொண்டு நெல் மூட்டைகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்போம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகரில் பல இடங்களில் லேசான தூரல் மழையும், பல இடங்களில் மழை பெய்வது போன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

First published:

Tags: Rainfall, Tamilnadu, Weather News in Tamil