Home /News /tamil-nadu /

2021 தொடக்கமே செம... ஜனவரி 10 வரை மழை இருக்கு.. வானிலை அப்டேட்

2021 தொடக்கமே செம... ஜனவரி 10 வரை மழை இருக்கு.. வானிலை அப்டேட்

கோப்பு படம்

கோப்பு படம்

நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும்

    தமிழகத்தில் இந்தாண்டு சராசரியை விட 4 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாகவும், ஜனவரி 10ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில்  இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றார்.

    மேலும் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்று கூறிய அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 24 டிகிரி பதிவாகும் என்றும் தெரிவித்தார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக கொள்ளிடத்தில் 9 செ.மீ, திண்டிவனம் 7 செ.மீ , செஞ்சி, மரக்காணம் தலா 6 செ.மீ, ஆடுதுறை, செய்யூர், விளாத்திகுளம், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் தலா 5 சென்டிமீட்டர் மழையும், கடலூர், பாண்டிச்சேரியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று கூறினார்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    குமரி கடல் பகுதியில் 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வடகிழக்கு திசையில் இருந்து வீசுவதால் அந்த பகுதிக்குச் செல்லும் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தமிழகத்தில் பெய்ய கூடிய சராசரியான மழை அளவு 946 மி.மீ இந்த ஆண்டு 986 மி.மீ மழை பொழிந்து உள்ளது. இது வழக்கமாக பெய்யகூடிய மழை அளவை விட 4 சதவீதம் அதிகம் என்று கூறினார்.

    மேலும் தென்மேற்கு பருவமழை காலங்களில் தமிழகத்தில் பெய்யும் மழை அளவு சராசரியாக 342 மி. மீ இந்த ஆண்டு 421 மி. மீ மழை பெய்து உள்ளதாகவும் இது வழக்கத்தை விட 24% அதிகம். மேலும் வடகிழக்கு பருவமழை காலங்களில் 449.7 மிமீ மழை பொழியும். இந்த ஆண்டு 477 மி.மீ மழை பொழிந்து உள்ளது. இது வழக்கத்தைவிட 6% அதிகம் என்று கூறினார்.

    2020 ஆண்டை பொறுத்தவரை 946 மி.மீ மழை பொழிந்து உள்ளதாக கூறிய இது வழக்கத்தைவிட 4% அதிகம். தமிழக மாவட்டங்களில் வட கிழக்கு பருவ மழையானது கன்னியாகுமாரி மாவட்டத்தில் 39% குறைவான மழையும், ஈரோடு, திருச்சி 30% குறைவு, நாமக்கல், நீலகிரி 25% குறைவு என்று அவர் கூறினார். அதேபோல் விழுப்புரம் திருபத்தூர் 45% அதிகமாகவும், கடலூர் சென்னையில் 1303 மி.மி சராசரியாக பெய்யும், அதில் தற்போது 1572 மிமி கிடைத்துள்ளது. எனவே 33% அதிகம். பருவமழை ஜனவரி 10-ஆம் தேதி இருக்கும் என்றும் கூறினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி