தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
மழை
  • Share this:
தமிழகத்தில் நெல்லை, கோவை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கோவை, தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 3 சென்டி மீட்டர் மழையும், கமுதி, பன்னிப்பட்டு, பெரியகுளம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக புவியரசன் தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் புவியரசன் கூறியுள்ளார்.

Watch Also:
First published: July 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்