ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி.. வெளுக்கப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி.. வெளுக்கப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை!

கனமழைக்கு வாய்ப்பு

கனமழைக்கு வாய்ப்பு

சென்னையைப் பொறுத்த வரை,அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

  வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

  09.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  10.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  12.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

  13.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

  சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

  இதையும் வாசிக்கஎடப்பாடியில் அணியில் இருந்து ஓ.பி.எஸ். முகாமுக்கு தாவிய முன்னாள் எம்பி… அதிமுகவில் மீண்டும் பரபரப்பு

  மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

  கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சோளிங்கர் (ராணிப்பேட்டை), பூதலூர் (தஞ்சாவூர்) தலா 9, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 7 தலா, காரியாபட்டி (விருதுநகர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மதுரை தெற்கு (மதுரை), பரமக்குடி (ராமநாதபுரம்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்) தலா 6,பெரம்பலூர் (பெரம்பலூர்), தல்லாகுளம் (மதுரை), திருத்தணி (திருவள்ளூர்), திருப்புவனம் (சிவகங்கை), விரகனூர் அணை (மதுரை) தலா 5,துறையூர் (திருச்சி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), வாலாஜா (இராணிப்பேட்டை), சித்தம்பட்டி (மதுரை), வீரகனூர் (சேலம்), பாம்பன் (இராமநாதபுரம்), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), தீர்த்தாண்டதனம் (ராமநாதபுரம்), கல்லக்குடி திருச்சி), கீழ அணைக்கட்டு (தஞ்சாவூர்) தலா 4, கடலாடி (ராமநாதபுரம்), திருவாலங்காடு (திருவள்ளூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), தொழுதூர் (கடலூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), புள்ளம்பாடி (திருச்சி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), மேலூர் (மதுரை), திருத்தணி PTO (திருவள்ளூர்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), பொன்னேரி (திருவள்ளூர்), பாலக்கோடு (தருமபுரி), இளையங்குடி (சிவகங்கை), திருவாடானை (ராமநாதபுரம்), அரக்கோணம் (இராணிப்பேட்டை) தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவானதாக தெரிவித்துள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Weather News in Tamil