Cyclone Burevi | தமிழக அரசின் செயல்பாடுகள் வலுவாக இருப்பதால், புயல் வலுவிழந்து காணப்படுகிறது.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
Tamil Nadu Weather | போதுமான அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடுகள் வலுவாக இருப்பதால், புயல் வலுவிழந்து காணப்படுகிறது என்றும் புயல் சேத விவரங்களை ஆய்வு செய்ய வருகிற 5ம் தேதி மத்திய குழு தமிழகம் வருவதாகவும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
- News18 Tamil
- Last Updated: December 2, 2020, 10:09 AM IST
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயல் சின்னமாக மாற கூடிய நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவசர ஆலோசனை நடத்தினார். மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்தார். 2-ஆம் தேதி முதல் புயலின் கோரத் தாண்டவம் உணரத் தொடங்கும் என்றும், அது நான்காம் தேதி பாம்பன் குமரிக்கு இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், தூத்துக்குடியில் மூன்று குழுக்களும், திருநெல்வேலியில் இரண்டு குழுக்களும், மதுரையில் இரண்டு குழுக்களும் ஆக மொத்தம் ஒன்பது குழுக்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களிலும் மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய தமிழக அதிகாரிகள் விரைந்து இருப்பதாகவும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தேவையான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். புயல் வீசும் நேரத்திலும், புயல் வீசுவதற்கு முன்பும் அதாவது ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை புயல் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்று அறிவித்த மாவட்ட மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் படிக்க...Cyclone Burevi | வங்கக்கடலில் உருவானது புரேவி புயல்.. முழு விவரம்..
புயல் உருவான பின்னர் புயல் நகரும் திசையைப் பொறுத்து பேருந்து சேவையை நிறுத்துவது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
புயலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், தூத்துக்குடியில் மூன்று குழுக்களும், திருநெல்வேலியில் இரண்டு குழுக்களும், மதுரையில் இரண்டு குழுக்களும் ஆக மொத்தம் ஒன்பது குழுக்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்துக்கு பக்கத்து மாநிலங்களிலும் மீனவர்களின் பாதிப்புகளை கண்டறிய தமிழக அதிகாரிகள் விரைந்து இருப்பதாகவும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தேவையான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.