ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“தமிழ்நாடு வாழ்க...” முதலமைச்சர் இல்லத்தில் கோலமிட்டு பொங்கல் வாழ்த்து

“தமிழ்நாடு வாழ்க...” முதலமைச்சர் இல்லத்தில் கோலமிட்டு பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் வீட்டின் முன்பு கோலம்

முதலமைச்சர் வீட்டின் முன்பு கோலம்

Pongal 2023 | பொங்கல் விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இல்லங்களில் தமிழ்நாடு வாழ்க என வண்ண கோலமிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவில் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு எனவே தமிழ்நாடு என்பதனை

தமிழகம் என்றும் அழைக்கலாம் என்று பேசினார். இதுதொடர்பாக ஆளுநருக்கு எதிராக திமுகவினர் உள்பட தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் குரல் கொடுத்தனர். இது ஆளுநர் உரையிலும் எதிரொலித்தது. இதனிடையே திமுகவினருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து மடல் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவர் இல்லத்தின் வாயிலிலும் தமிழ்நாடு வாழ்க எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்று வேண்டுகோள் வைத்தார்.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் முன்பு தமிழ்நாடு வாழ்க என வண்ணக் கோலமிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பாக தமிழ்நாடு வாழ்க, தை புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதி வண்ணக் கோலமிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள வேணுகோபால சுவாமி ஆலயத்திலும் தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டுள்ளனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் கோட்டூர்புரம் இல்லம், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் சி ஐ டி காலனி இல்லம் முன்பாகவும் தமிழ்நாடு வாழ்க என்ற வாசகத்துடன் வண்ணக் கோலம் போடப்பட்டுள்ளது.

First published:

Tags: Pongal 2023, Tamilnadu