ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண்கள், திருநங்கைகள், மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை : அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு

பெண்கள், திருநங்கைகள், மாற்று திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை : அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 1,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 1,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 1,792 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

  • 3 minute read
  • Last Updated :

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் பேருந்துகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்து சேவைக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பணிமனையில் இருந்து பேருந்துகள் புறப்படும் முன்பு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவதோடு, முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். குளிர்சாதன வசதியுள்ள பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, சென்னை பல்லவன் இல்லத்தில் பேருந்துகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 1,792 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஊரடங்கிற்கு முன்பு பொதுமக்கள் பெற்ற ஆயிரம் ரூபாய் பயணச்சீட்டுக்கான அவகாசம் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், இலவச பயணச்சீட்டு பெற மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் அடையாள அட்டையை உடன் வைத்திருக்க வேண்டும் என கூறினார்.

மேலும், தொற்று எண்ணிக்கை குறைந்ததால் முதலமைச்சர் முடிவின் படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளதாகவும், 1,800 பேருந்துகள் சென்னையிலும், பிற மூன்று மாவட்டங்களில் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் கூறினார். பயணிகளின் வருகை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், தினசரி இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறினார். அப்போது கட்டணமில்லா பயணச் சீட்டை காண்பித்தார்.

மகளிர், மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவியாளர், மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பயணச்சீட்டு மானியமாக ரூ.1,200 கோடியை அரசு வழங்குகிறது. பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பேருந்துகளுக்கு வண்ணம் மாற்றுவது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும். போக்குவரத்துக் கழகத்தின் கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், போக்குவரத்துத்துறையை நல்ல துறையாக மாற்றுவேன் என்றும் கூறினார்.

இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து முதற்கட்டமாக தாம்பரம், மதுராந்தகம், மாமல்லபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, அம்பத்தூர் பணிமனைகளில் இருந்து திருவள்ளூர், வேப்பம்பட்டு, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 164 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து சேவை தொடங்கிய முதல்நாள் என்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. மேலும் பயணிகளின் வருகையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Must Read : நீட் தேர்வுக்கு தீர்மானம் மட்டும் தீர்வாகாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 40 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள 4 பணிமனைகளில் இருந்து சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பகுதிகளுக்கு சுமார் 100 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில், கொரோனா விதிமுறைகளை பின்பன்றி மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. 50 விழுக்காடு பயணிகளுடன் காலை 9 மணி முதல் 11 மணி வரை 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலும் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். முதற்கட்டமாக காலை 6:30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

First published: