தமிழகத்தில் 9,000-க்கும் குறைந்த ஒரு நாள் பாதிப்பு- 24 லட்சத்தைக் கடந்த மொத்த பாதிப்பு

மாதிரிப் படம்

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 24 லட்சத்தைக் கடந்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 287 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டபோது நாள் ஒன்றுக்கு 36,000 பேர் வரைக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது. தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு அளவு முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,63,649 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 24,06,497 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 19,860 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுவரையில், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 22,86,653 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 287 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 30,835 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் கோயம்புத்தூரில் 1,089 பேருக்கும், சென்னையில் 492 பேருக்கும், செங்கல்பட்டில் 353 பேருக்கும், ஈரோட்டில் 964 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: