முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்து தற்போது 17,322 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,61,974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,11,837 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,753 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,39,637 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,878 ஆக அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பாதித்து தற்போது 17,322 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 189 பேருக்கும், கோயம்புத்தூரில் 209 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona Vaccine, CoronaVirus