தமிழகத்தில் 1,800-யை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 1,800-யை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு

கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைந்திருந்த கொரோனா பாதிப்பு கடந்த 10 தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் 24 மணி நேரத்துக்கு கொரோனா பாதிப்பு 13,000 வரை குறைந்தநிலையில் தற்போது மீண்டும் 50,000-த்தைக் கடந்துள்ளது.

    இந்தநிலையில், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 80,761 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் இதுவரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,73,219 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,027 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,50,091 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,641 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 664 பேருக்கும், செங்கல்பட்டில் 162 பேருக்கும், கோயம்புத்தூரில் 153 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: