Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 8,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,18,722 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில், 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,04,762 பேராக அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 1,38,878 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 23,938 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,733 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோயம்புத்தூரில் 1,020 பேருக்கும், சென்னையில் 1,223 பேருக்கும், திருப்பூரில் 609 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி