Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையில் இன்று ஒரே நாளில் 383 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 737 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,701 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 737 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,62,97 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 322 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    தற்போது, 4,366 பேருக்கு கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 383 பேருக்கும், செங்கல்பட்டில் 128 பேருக்கும், கோயம்புத்தூரில் 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி