Home /News /tamil-nadu /

இன்று ஒரே நாளில் 30580 பேருக்கு கொரோனா பாதிப்பு... 40 பேர் தொற்றுக்கு உயிரிழப்பு

இன்று ஒரே நாளில் 30580 பேருக்கு கொரோனா பாதிப்பு... 40 பேர் தொற்றுக்கு உயிரிழப்பு

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,49,638 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 31,33,990 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது, வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 2,00,954 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 24,283 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,218 ஆக அதிகரித்துள்ளது.

    இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்.. கொதிக்கும் மீனவர்கள்!



    இன்று மட்டும் சென்னையில் 6,383 பேருக்கும், செங்கல்பட்டில் 1,841 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,912 பேருக்கும், ஈரோட்டில் 1,220 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி