Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பின் முழு ரிப்போர்ட்...

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பின் முழு ரிப்போர்ட்...

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

Corona Virus | தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 30,000-த்தைக் கடந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,43,004 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில், 30,215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 31,64,205 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 2,06,484 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 24,639 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,264 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 6,296 பேருக்கும், செங்கல்பட்டில் 1,742 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,786 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,236 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி