Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஓமைக்ரான் தொற்று

ஓமைக்ரான் தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,48,253 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 28,561 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 30,42,796 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 1,79,205 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 19,978 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,112 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 7,520 பேருக்கும், செங்கல்பட்டில் 2,196 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,390 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,148 பேருக்கும், திருநெல்வேலியில் 756 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி