தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் 3 இலக்கங்களிலும் 4 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலும் தொற்று பதிவு!

மாதிரிப்படம்

தமிழகத்தின் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் தொற்று பதிவாகியுள்ள அதேவேளையில், 4 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று 1,893 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றை கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,50,225 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,893  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,79,130 ஆக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: Exclusive: பாதி விலையில் விற்கப்படும் காலாவதியான உணவுப் பொருட்கள்!


    இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,930 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,24,400 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,367 ஆக அதிகரித்துள்ளது.

    வீட்டுத் தனிமையையும் சேர்த்து தற்போது கொரோனா பாதித்து 20,363பேர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். கோயம்புத்தூரில் இன்று 224 பேருக்கும் சென்னையில்  209 பேருக்கும்  ஈரோட்டில்  169 பேருக்கும் செங்கல்பட்டில் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: மதுரை எய்ம்ஸ்: மத்திய அரசு அளித்த அதிர்ச்சி பதில்


    குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 3 பேருக்கும் தென்காசியில் 4 பேருக்கும்  பெரம்பலூரில் 6 பேருக்கும் விருதுநகரில் 9 பேருக்கும்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published: