தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 26,22,678 பேராக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டின் இன்று ஒரே நாளில் 1,61,583 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில், 1,592 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்த பாதிப்பு 26,22,678 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,607 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,71,378 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 35,018 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து 16,282 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 165 பேருக்கும், கோயம்புத்தூரில் 229 பேருக்கும், ஈரோட்டில் 104 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: