தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு - 27 பேர் உயிரிழப்பு

கொரோனா

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,56,386 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,05,647 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,797 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரையில், 25,52,507 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,788 பேராக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று மட்டும் சென்னையில் 170 பேருக்கும், கோயம்புத்தூரில் 181 பேருக்கும், ஈரோட்டில் 130 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து தற்போது மட்டும் 18,352 பேர் சிகிச்சையில் உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published: