ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு...

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா பாதிப்பு...

கொரோனா

கொரோனா

சென்னையை சுற்றிய மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது. எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளபோது மீண்டும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 25,896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,65,490 ஆக அதிகரித்துள்ளது.

உதயநிதிக்குப் பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது பாருங்கள் முதல்வரே - சிவி சண்முகம்

தற்போது கொரோனா பாதித்து 5,912 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 621 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று மட்டும் சென்னையில் 616 பேருக்கும், செங்கல்பட்டில் 266 பேருக்கும், கோயம்புத்தூரில் 64 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus