ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெரியார் மண் என சமூக நீதி பேசி அநீதி இழைக்கும் திராவிட கட்சிகள்..பீகாரைப் போல குடிவாரி கணக்கெடுப்பு கேட்கும் சீமான்!

பெரியார் மண் என சமூக நீதி பேசி அநீதி இழைக்கும் திராவிட கட்சிகள்..பீகாரைப் போல குடிவாரி கணக்கெடுப்பு கேட்கும் சீமான்!

மதுரையில் சீமான் பேச்சு

மதுரையில் சீமான் பேச்சு

ராஜராஜசோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை இந்துவும் இல்லை, அனைவரும் வரலாற்றை படிக்க வேண்டும் என சீமான் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

திராவிட கட்சிகள் சமூக நீதி பேசி அநீதி இழைத்துக் கொண்டிருப்பதாகவும், பீகார் மாநிலத்தை போல தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்ததில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

கூட்டத்தில் சீமான் பேசியதாவது, "எது உண்மையான சமூக நீதி?ஏன் மொழி வாரி கணக்கெடுப்பு அவசியம்? நாம் தற்போது குடிவாரி கணக்கெடுப்புக்காக போராட்டத்தை துவங்கி உள்ளோம். நான் குடிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் வரை விடமாட்டேன்.

இட ஒதுக்கீடு எதற்காக கொண்டு வரப்பட்டது. சாதியின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறத்தோ அதே சாதியின் அடிப்படையில் கிடைக்க வேண்டுமெனத்தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. நாட்டின் கல்வி அதிகாரம், வளம் இது மூன்று நாட்டின் வாழும் குடிமக்களின் எண்ணிக்கையில் கொடுப்பதுதான் சமூக நீதி. இத்தனை ஆண்டு ஆட்சி செய்த இரண்டு திராவிடக் கட்சிகளும் சமூக சமூக நீதி என பேசி அநீதியை இழைத்து இருக்கின்றன.

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகம் இருவரும் இணையாததால் பிரச்னை என்கிறார் அம்பேத்கார். அதிகாரத்தை கைப்பற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இணைத்து அரசியல் செய்ய வேண்டுமென்கிறார் அதைத்தாம் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்து இருக்கிறது. பட்டியலின, பழங்குடி மக்களுக்கு ஆங்கிலேய அரசு இட ஒதுக்கீடு கொடுத்தது. 2008 படி 17.5 உயர் வகுப்பினர் 77.2% வேலை வாய்ப்பு பெறுகின்றனர். பழங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் 25% பேரு இருக்கின்றன. ஆனால் அவர்கள் 17.4% வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் அவர் 8% வாய்ப்பை இழக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் 57% பேர் இருக்கிறார்கள் 5% பேர் மட்டுமே வாய்ப்பை பெறுகின்றனர். இது தான் குடிவாரி போராட்டம் நடத்த காரணம். 5 பேர் இருக்கும் வீட்டுக்கு 50 பேர் சாப்பாட்டை கொடுக்காதே. நிலம் என்னுடையது, விவசாய செய்தவன் நான், காய்கறி விலைவித்தவன் நான் நீ யார் விலை நிர்ணயம் செய்ய.

நாங்கள் கேட்பதுதான் சாதி ஒழிப்பிற்கான முயற்சி, சாதி வாரி, மொழி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் நாம் தமிழரின் கோரிக்கை. சமூகநீதி பேசுகிற, பெரியார் மண் என பேசும் இவர்கள் எடுக்க மறுப்பது ஏன்? பீகாரில் பெரியார் பற்றியெல்லாம் பேசாத நிதீஷ்குமார் எடுக்கிறார். எது உண்மையான சமூக நீதி? நிதிஷ் குமார் எடுக்கிறார் நீங்கள் ஏன் எடுக்க தயங்குவது. எங்களை வஞ்சித்தது தமிழக மக்களுக்கு தெரிந்துவிடும் என்பதற்காக எடுக்க மறுக்கின்றனர். தேவேந்திரர் எவ்வளவு என எண்ணிக்கை நடத்தி பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவன் என யாரையாவது சொன்னால் மறைந்த அப்பா மணிவண்ணனின் செருப்பு என்னிடம் உள்ளது அதாலேயே பிச்செரிந்துவிடுவேன்.

ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ராஜராஜசோழன் ஆண்ட காலத்தில் இந்தியாவும் இல்லை இந்துவும் இல்லை வரலாற்றை படிக்க வேண்டும். அவர் கட்டிய கோயில் சைவக் கோயில் வரலாற்று குறிப்பில் அவர் சைவ மரபினர் என்று தான் உள்ளது. குடிவாரி கணக்கெடுப்பு எடுங்கள் இல்லையென்றால் சமூக நீதி பற்றி பேசுவதை விடுங்கள். யாரையும் ஏமாற்ற மாட்டோம் யாரிடமும் ஏமாற மாட்டோம். பீகார் எந்த வழியை பின்பற்றியதோ அதே போல் இங்கும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும்.

இதையும் படிங்க: தீபாவளி வசூல் வேட்டை - தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் மெகா ரெய்டு.. ரூ.1.12 கோடி ரொக்கம் சிக்கியது!

பொருளாதார அளவுகோல் மாறும். ஆனால் எவ்வளவு பெரிய ஆளாக மாறினாலும் தாழ்த்தப்பட்ட என்ற சொல் மாறாது. அதற்கு உதாரணம் இசைஞானி இளையராஜா. ஈடு இணையற்ற சாதனை புரிந்த இளையராஜா தலித் அடிப்படை எம்.பி பதவி கொடுக்கப்பட்டதாக செல்கின்றனர். அதை இளையராஜா நிராகரித்து இருக்க வேண்டும்" இவ்வாறு சீமான் பேசினார்.

First published:

Tags: Caste, Dravidam, Naam Tamilar katchi, Seeman